சின்னசேலம் : சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடியில் பூஞ்சோலை அம்மனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் அக்னி திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியையொட்டி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு ஊரணி பொங்கல், மாலை 3 மணிக்கு சாமி குடி அழைத்தல், காப்புக்கட்டுதல், சனிக்கிழமை சாகை வார்த்தல் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தலும், பிற்பகல் 2 மணிக்கு அக்னி திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து சோலையம்மன் மற்றும் கரகம் வைத்து ஊஞ்சலில் மாரிமுத்து பூசாரி தாலாட்டு பாடிவழிபாடு நடத்தினார். விழாக்குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.