புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் துளுக்கானத்தம்மன், அங்காளபரமேஸ்வரி, வழிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் காலை 5 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தன பூஜை, கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடந்தது. காலை 8.30 மணிக்கு மகா கணபதி, முருகன், வழிமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.