புதுச்சேரி: இடையார்பாளையம் ஞானமேடு கிராமத்தில் உள்ள சேஷா ஆஸ்ரமத்தில் குரு பூர்ணிமா வேதவியாச பூஜை நடந்தது. ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளுக்கு அஷ்டாதச திரவிய அபிஷேகம், விசேஷ அலங்காரம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முத்து குருக்கள் பூஜைகளை நடத்தி அருளாசி வழங்கினார்.