எம்பெருமானுக்கு அழகிய தமிழில் அர்ச்சனை செய்த ஆண்டாள்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2022 08:01
புதுச்சேரி: வாழ்த்துவற்கு பரிபூரண அன்பும், பாசமும் மட்டுமே வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த 16ம் தேதி திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு துவங்கியது. ஜன., 12ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
நேற்றைய சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் 24ம் பாசுரத்தில் ஆண்டாள் மாலவனுக்கு சூட்டும் பாமாலை போற்றி மாலை எனப்படுகிறது. 24வது பாசுரத்தின் கூட்டுத்தொகை 6 .அதனால் இப்பாசுரத்தில் 6 முறை எம்பெருமானின் பெருமைகளை போற்றி அருளியுள்ளார்.இந்த பாசுரத்தின் மூலம், அன்றே எம்பெருமானுக்கு அழகிய தமிழில் அர்ச்சனை செய்து காட்டியுள்ளார் ஆண்டாள்.கண்ணன் மேல் வைத்த பேரன்பின் வெளிப்பாடாக, ஆண்டாள் தன் தோழியர் சூழ கண்ணனை போற்றி பல்லாண்டு பாடிய பாசுரம் ஆகும்.15ம் பாசுரமான எல்லே இளங்கிளியே பாசுரத்தை திருப்பாவையின் திருப்பாவை என்று போற்றி அனுபவித்தது போல், இந்த பாசுரத்தை திருப்பாவையின் திருப்பல்லாண்டு என்றும், அனுபவிப்பர் பெரியோர்.பரமனுக்கு அடியவர் பல்லாண்டு பாட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழலாம்.
இறைவனே சர்வ லோகம். அவனுக்கு எல்லா மங்களமும் உண்டாக வேண்டும் என்று சிறியவரான அடியவர் போற்றி வாழ்த்துவது ஏன். அது சரியா என்று கேள்வி எழலாம்.அதற்கு ஒரே பதில், அடியவருக்கு பரமன் மீதுள்ள பேரன்பின் வெளிப்பாடே இந்த பல்லாண்டு பாடுதல். வாழ்த்துவதற்கு எப்போதும் வயது தடையில்லை. வாழ்த்த பரிபூரண அன்பும், பாசமும் மட்டுமே வேண்டும்.இதையே பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய விதமும், ஆண்டாள் போற்றி பாடிய விதமும் கொண்டு அனுபவிக்கலாம்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.
இந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று 09-01-2022 (மார்கழி 25-ம் தேதி) காலை தனுர் லக்னத்தில் 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19-01-2022 (தை மாதம் 6-ம் தேதி) அன்று ஆளும் பல்லக்கில் ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளும் வைபத்துடன் முடிவடையும்;.