தைப்பூசம் நகரத்தார் காவடி யாத்திரை புறப்படுவதில் சிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2022 08:01
தேவகோட்டை: அரசு கட்டுபாடுகள் காரணமாக பழநி தைப்பூசம் காவடிகள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேவகோட்டையில் இருந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் நகரத்தார் , முதலியார் சமூகத்தினர் நேர்த்திக்கடனாக தைப்பூச விழாவிற்காக பாதயாத்திரையாக பழநிக்கு காவடி எடுத்து சென்று மலையேறி முருகன் வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தைப்பூச விழா 18ம் தேதி நடைபெற உள்ளது. தைப்பூசம் விழாவிற்கு செல்வதற்காக நேற்று (ஞாயிறு) பக்தர்கள் காவடிகளை கட்டி பொங்கலிட்டு சுவாமி கும்பிட்டு இன்று (திங்கள்) நகர் வலம் வந்து நாளை தேவகோட்டையில் இருந்து ஏராளமான பக்தர்களுடன் காவடி புறப்பட வேண்டும். ஆனால் அரசு கட்டுபாடுகள் , வெள்ளி சனி ஞாயிறு கோயில்கள் அடைப்பு என்பதால் காவடி பாதயாத்திரை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 நகரத்தார் காவடி கட்டி நேற்று புறப்பட இருந்த நிலையில் நேற்று காவடி கட்டும் நிகழ்வு நடைபெறவில்லை. நாளை முதலியார் சமூக காவடி மட்டும் தேவகோட்டையில் இருந்து புறப்படுகிறது. இது பற்றி நகராத்தார் சமூகத்தினரிடம் விசாரித்த போது , மூன்று நாள் கோயில்கள் அடைப்பு என அரசு அறிவித்துள்ளது. பாதயாத்திரை சென்று
மற்ற நாட்களில் வழிபடலாம் என்றாலும் நடந்து செல்வோரை திண்டுக்கல் மாவட்டத்தில் மறித்து பஸ்சில் ஏற்றி செல்வதாக கூறுகின்றனர். இதனாலும் காவடி எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவடி எடுத்து செல்வது பற்றி பாதயாத்திரையை பாரம்பரியமாக வழிநடத்தும் செல்பவர்கள் மேலிடத்தில் பேசி வருகின்றனர். இன்று ( திங்கட்கிழமை) தெரியும். அதனைத் தொடர்ந்து காவடி யாத்திரை இருக்கும். காவடி எடுத்து செல்வது தான் எங்கள் பொறுப்பு என்றனர். குன்றக்குடியிலிருந்து பாரம்பரியமான இரண்டு காவடிகள் புறப்படும் என கூறப்படுகிறது. பக்தர்கள் பாதயாத்திரை வழக்கம் போல் நடக்கிறது.