Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் ... திருக்கோஷ்டியூரில் ஜன.13 ல் சொர்க்க வாசல் திறப்பு திருக்கோஷ்டியூரில் ஜன.13 ல் சொர்க்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால கோவில்கள் புதுப்பிப்பு எப்போது? பணிகளை துவக்க எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பழங்கால கோவில்கள் புதுப்பிப்பு எப்போது? பணிகளை துவக்க எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2022
12:01

உடுமலை: பழங்கால கோவில்களை அவற்றின் தொன்மை மாறாமல் புனரமைக்க, தொல்லியல்துறையின், தொழில்நுட்ப கருத்துரு அடிப்படையில், இந்து அறநிலையத்துறையினர், பணிகளை துவக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம் அமராவதி படுகை மற்றும் குடிமங்கலம் பகுதியில், பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கோவில்கள் அதிகளவு உள்ளன.

இக்கோவில்களில், கல்வெட்டு, பழங்கால வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்று சின்னங்களாக உள்ளன.புதுப்பிக்க சிக்கல்பல்வேறு காரணங்களால், சிறப்பு பெற்றிருந்த, பழங்கால கோவில்கள் போதிய பராமரிப்பின்றி, சிதிலமடைய துவங்கின.கற்களை மட்டுமே கொண்டு, சிறப்பாக கட்டப்பட்ட கற்றளி அமைப்பிலான கோவில்களில், மழை நீர் உட்புகுதல் போன்ற காரணங்களால், மேற்புறத்தில் விரிசல் ஏற்பட்டன.கோபுரங்களில், வளர்ந்த மரங்களால், அதிலுள்ள சிற்பங்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு கோவில்களின் முன்மண்டப துாண்கள் விரிசல் அடைந்துள்ளன.சில கோவில்களை கிராம மக்கள் தாங்களாகவே புதுப்பிக்க முன்வந்தனர். இருப்பினும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், புனரமைப்பு பணிகளின் போது பாதிக்கப்படும் நிலை இருந்தது.தொழில்நுட்ப கருத்துருபழங்கால கோவில்களின் தொன்மை மாறாமல், அவற்றை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை, புதிய திட்டத்தை செயல்படுத்தியது.அதன்படி, தொல்லியல் துறை சார்பில் கோவில்களில், ஆய்வு நடத்தப்பட்டு, புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப கருத்துரு இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.அதன்படி, புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதால், கல்வெட்டு மற்றும் சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. அவற்றின் பழமையும் பாதுகாக்கப்படும்.சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன், கொழுமம் வரதராஜ பெருமாள், கோட்டமங்கலம் வல்லக்கொண்டநாதசுவாமி உட்பட கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, தொழில்நுட்ப கருத்துருவை இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பித்து, பல ஆண்டுகளாகிறது.இக்கருத்துருவில், கோவில் கட்டப்பட்ட ஆண்டு, அவற்றின் கட்டுமான சிறப்பு, புதுப்பிப்பு பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.அதன்படி, கல் கட்டுமானங்களை பிரித்து, புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த கோவிலிலும் பணிகள் துவங்கவில்லை.தற்போது, தமிழகத்தில், பல்வேறு பழமையான கோவில்களில் புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், உடுமலை பகுதி கோவில்களிலும் பணிகளை துவக்க, இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar