ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2022 12:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் வெகு சிறப்பாக நடந்தது.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி வருடம் தோறும் மார்கழி மாதம் இருபத்தி ஏழாம் நாளன்று ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசல் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசல் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், போலீஸ் ஐ.ஜி. முருகன், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆண்டாள், பெரியாழ்வார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் முத்துப்பட்டர் செய்திருந்தார்.