மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஜன., 13ல் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2022 04:01
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஜன., 13ல் அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மானாமதுரை வீர அழகர் கோயிலில் நாளை நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக அதிகாலை 4:00 மணிக்கு உற்சவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சுவாமிகள் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கோயிலை சுற்றி வலம் வரும் சுவாமிகள் தாயார் சன்னதி மண்டபத்தில் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர் கோபி மாதவன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.