நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2022 03:01
நாகை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஆயிரம் நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக நாகை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் முன்கள பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி முகாமினை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட முன்கள பணியாளர்களுக்கு உடல்ரீதியாக மாற்றங்களை ஏதாவது ஏற்படுகிறது எனவும் கண்காணிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் அருண் தம்புராஜ் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் 13, 14 ஆம் தேதி நடைபெற உள்ள நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிப்பதாக தெரிவித்தார்.