ஸ்ரீரங்கம் மடாதிபதி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2026 10:02
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மடாதிபதி தேசிக ராமானுஜதாசர் நேற்று இரவு 8:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். மடாதிபதியை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர். அவர் மூலவர் சரநாராயண பெருமாள், ேஹமாம்புஜவல்லி தாயார், லட்சுமிநரசிம்மர் சுவாமிகளை தரிசனம், மங்களா சாசனம் பூஜையில் கலந்து கொண்டார்.