திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உத்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2026 11:02
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப உத்சவம் நேற்று துவங்கியது.
திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு, உற்சவருக்கு முத்தங்கி சேவை நடந்தது. கண்ணாடி அறையில் வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை முதல் உற்சவர் வீரராகவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாசி தெப்ப உத்சவம் நேற்று துவங்கியது. மாலையில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, கோவில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் குவிந்து, பெருமாளை வழிபட்டனர். நாளை வரை தெப்ப உத்சவம் நடக்கிறது.