நாகர்கோவில், : நாகர்கோவில் நாகராஜாகோயில் தை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மிக பழமை வாய்ந்த நாகர்கோவில் நாகராஜாகோயிலில் நாகர் மூலவராக உள்ளார். மூலஸ்தானம் இன்னும் ஓலை கூரையில் உள்ளது. இங்குள் புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குழந்தை வரும் கோயிலாக பெண்கள் நம்புகின்றனர். இங்கு தை திருவிழா கடந்த 10–ம் தேதி கொடியறே்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ், பா.ஜ., எம்.எல்.ஏ., எம்.ஆர். காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்தனர். இன்று ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.