தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால், பன்னீர் அபிஷேகம் செய்தனர். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர் பண்ணைக்காடு பாலசுப்பிரமணி கோயில்களிலும் விழா சிறப்பாக நடந்தது.