தென்காசி: தென்காசி தர்ம விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. தென்காசி ரயில்வே ரோடு நம்பிராஜன் சாலை தர்ம விநாயகர் கோயிலில் 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு தீபாராதனை, விநாயகருக்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கோயில் பகுதியில் உள்ள அரசு, வேம்புக்கு திருக்கல்யாணம் நடந்தது. அரசுக்கு மாப்பிள்ளை அலங்காரமும், வேம்புக்கு மணப்பெண் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் வேம்புக்கு திருமாங்கல்யம் கட்டப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. ம.தி.மு.க.,செயலாளர் வெங்கடேஸ்வரன், அம்பாள் சாமில் முருகேசன், அ.தி.மு.க., செயலாளர் முத்துக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் விநாயகர் பக்தர்கள் செய்திருந்தனர்.