ஆழ்வார்குறிச்சி: கடையம் பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடந்தது. கடையத்தில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவநநாதர் நித்தியகல்யாணி அம்பாள் கோயிலுக்கு கீழ்புறம் கீழக்கடையம் பத்திரகாளியம்மன் அம்பாள் கோயிலின் மூல கோயில் உள்ளது. 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடைசி செவ்வாய் நாளான நேற்று காலை விசேஷ பூஜைகள் நடந்தது. கோயில் அர்ச்சகர் சுப்பிரமணியன், தில்லைநாதன், சரவணசுந்தர் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். விசேஷ அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. அன்னதானத்தில் சிறப்பாக பக்தர்களுக்கு கூழ் வழக்கப்பட்டது. விழா சிறப்பு நிகழ்சியில் கடையம் யூனியன் கவுன்சிலர் கணேசன், நவசக்தி அறக்கட்டளை கந்தன், மாவட்ட தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் அழகுதுறை, அருணாசலம்பட்டி ராஜவேலு, கடையம் இளைஞர் காங்., தலைவர் பாரதிராஜன், முத்துபாலகிருஷ்ணன், பணிநிறைவு ராணுவ வீரர் ராமசாமி உட்பட 18 பட்டியை பக்தர்கள் கலந்து கொண்டனர்.