பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் தை மாதம் மகா சனி பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவையொட்டி, இக்கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், இளநீர் உட்பட, 16 அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, மூலவர் தேசி லிங்கேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் நடந்தன. தேசிய லிங்கேஸ்வரர் உடனமர் வீரமாஸ்த்தி அம்மன் சுவாமி திருக்கோவில் உலா நிகழ்ச்சியில், பக்தர்கள் கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.