புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து வழிபட்டனர். முருங்கப்பாக்கம் - வில்லியனுார் மெயின் ரோட்டில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அமாவாசை தினங்களில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து வழிபடுவர்.நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இரவு 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து மகா தீபம் ஏற்றினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.