மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2022 03:02
கள்ளக்குறிச்சி : மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் 3வது வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
கொரோனா தொற்றில் இருந்து மக்கள் பூரணகுணமாக வேண்டியும், உலக நன்மைக்காகவும் நேற்று 24வது ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது.நிகழ்ச்சியையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. குத்துவிளக்கு பூஜை செய்யும் வழிமுறைகள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் அர்ச்சகர் கேசவ பட்டர் விளக்கினார்.கோவில் வளாகத்தில் பெண்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.