எத்திராஜ் என குறிப்பிடப்படுபவர் ராமானுஜர். துறவிகளை வட மொழியில் ‘யதி’ என்பர். துறவிகளில் சிறந்து விளங்கியதால் ராமானுஜருக்கு ‘யதி ராஜர்’ என்று பெயர் வந்தது. இச்சொல் பிற்காலத்தில் ‘எத்திராஜர்’ என்றாகி விட்டது. ராமானுஜர் மீது பக்தி கொண்டவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ‘எத்திராஜ்’ என்று பெயரிடுவது வழக்கம். ‘யதி’ என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ‘அடக்கியவர்’. ஐம்புலன்களையும், மனதையும் அடக்கும் வலிமை உள்ளவர்களை ‘யதி’ என்று குறிப்பிடுவர்.