விடியற்காலை பொழுது என்பது இரவு முடிந்து பகல் துவங்கும் நேரமாகும். கிழக்கு வெளுத்து விட்டது என்று சொல்வார்கள். சூரியனின் சிவப்பான ஒளி கிழக்கே தோன்றுவதற்கு முன் இந்தப்பொழுது அமையும். கோடை காலத்தில் சுமார் ஐந்தரை மணிக்கும், மழை மற்றும் குளிர் காலங்களில் ஆறரை மணிக்குள்ளும் இந்த வைகறைப் பொழுது இருக்கும். இந்த நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைத் துவங்கிவிட வேண்டும். சிலநிமிடங்களில் கிழக்கு சிவந்து சூரியன் உதயம் நிகழும். சூரியன் உதயமாகும் பொழுது நாம் நமஸ்காரம் செய்து கொண்டிருக்க வேண்டும். இதற்கான மந்திர ஸ்லோகங்களை சொல்ல வேண்டும். இப்போது புத்தகங்கள் தமிழிலேயே கிடைக்கின்றன.