ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று எண்களின் வரிசையானது கணக்கிடப்படுகிறது. இந்த எண்களே பூஜைகளில் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பேராயிரம் பரவி வானோரேத்தும் என்றும் பூவனூர் புனிதன் திருநாமந்தான் நாவினால் நூறு நூறாயிரம் என்றும் அப்பர் சுவாமிகள் குறிப்பிடுகிறார். எனவே நூறு, ஆயிரம் என்பது அர்ச்சனை அல்லது வழிபாடாகும். நிறைவில் வரும் எட்டு என்பது நாம் செய்த வழிபாட்டின் பலனை நமக்கு அளிப்பதாகும். அதாவது அஷ்டலட்சுமி, அஷ்ட மூர்த்தி, அஷ்ட ஐஸ்வர்யம் என்பனவற்றை நமக்குக் கிடைக்கச் செய்வதாகும்.