புதுச்சேரி: மீனாட்சிப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.கதிர்காமம், மீனாட்சிபேட்டை ரமணபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டது. அதனையொட்டி வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.கும்பாபிஷேக விழா இன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு யாக பூஜை நடக்கிறது.6ம் தேதி காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகிறது. 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு சக்தி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.