பதிவு செய்த நாள்
05
பிப்
2022
05:02
அனுப்பர்பாளையம்: திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகை, உடனமர் அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 முதல் 9.00 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவிற்கு பேரூர் ஆதீனம் கையிலை மாமுனிவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சரவணம்பட்டி குமரகுருபர சுவாமிகள், ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள், ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள், ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கும்பாபிஷேகத்தையோட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா, ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், திருப்பணி குழுவினர், விழா கமிட்டியினர், இளைஞர் அணியினர், கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.