திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2022 11:02
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியெற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் , 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவின் தினமும் சுவாமியும், அம்பாளும், வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16 -ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்காத நிலையில் இந்த ஆண்டு மாசி திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.