பதிவு செய்த நாள்
07
பிப்
2022
02:02
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 2-ல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, ஆறாம் யாக சாலை பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க, கோவில் கருவறை மேல் உள்ள கலசம், கோபுர கலசம் உள்ளிட்டவற்றின் மீது, 8:15 மணியளவில், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. கொரோனா ஊரடங்கால், 3,000 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், குறைந்த அளவே பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.