Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் கட்டுமானம் அரசுக்கு ... கடலி திரவுபதியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
05:02

திருவொற்றியூர்: தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடுகள், சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், ௧௦ நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு திருவிழா, இன்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கி, 17ம் தேதி முடிகிறது. தியாகராஜ சுவாமி கோவிலின் முக்கிய திருவிழா என்பதால், ஏராளமான பக்தர்கள் குவிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி கூறியதாவது:தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவை, வெகு விமரிசையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கோவிலுக்கு வர வேண்டும். முடிந்த வரை, கோவிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி இருத்தல் அவசியம். தவிர, 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டும். கோவில் நிர்வாகம் சார்பில், அனைவரும் திருவிழா நிகழ்வைக் காண, யுடியூப் சேனல் வழியாக, முக்கிய நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்க, தட்சிணாமூர்த்தி கோவில் மண்டபம் பின் புறம் உள்ள ஹால், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. குடிநீர், கழிப்பறை மற்றும் இ - டாய்லெட் வசதிகள் செய்யப் பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar