செஞ்சி: கடலி திரவுபதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்த கடலி திரவுபதி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 6ம் தேதி மாலை விநாயகர், யாகசாலை பிரவேசம், கும்பஅலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, மகா சங்கல்பமும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து யாத்ரா தானமும், 9.10க்கு கடங்கள் புறப்பாடும், 9.20க்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. 10 மணிக்கு திரௌபதி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் ஈஸ்வர சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். திருப்பணி குழுவினர் மற்றும் திரளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.