வெற்றி என்ற ஒற்றைக் குறிக்கோளை நோக்கியே அனைவருடைய வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் அளவு அவரவர் முயற்சி, உழைப்பு, சூழ்நிலையை பொருத்து மாறுபடுகிறது. அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது சரிதான். ஆனால் அதற்கேற்ற தகுதியை வளர்ப்பதும் அவசியம் அல்லவா... இலக்கை நிர்ணயித்த பிறகு ‘இதை நம்மால் செய்ய முடியுமா..’ என்ற கேள்வி தோன்றிவிட்டால், அப்போதே தோல்வி ஆரம்பமாகிவிடுகிறது. ‘நம்மால் முடியவில்லை எனில் யாரால் இதை செய்ய முடியும்’ என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். வெற்றி எனும் பழத்தை சுவைக்க விரும்பினால், நம்பிக்கை விதையை நீங்கள்தான் விதைக்க வேண்டும்.