கிரேக்க அறிஞரான சாக்ரடீஸ் மீது பலர் பொறாமை கொண்டனர். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அழுகிய பழங்கள், கெட்டுப்போன உணவுகள் அங்கு இடம்பெற்றிருந்தது. இதைப்பார்த்து கோபப்பட்ட நண்பர்களை அமைதிப்படுத்தினார் சாக்ரடீஸ். பின்பு பழங்களையும் ரசித்து உண்டார். விருந்தை முடித்து வெளியே வந்ததும், “ஏன் இப்படி செய்தீர்கள்.. அவர்களை தட்டிக் கேட்க வேண்டாமா’’ என நண்பர்கள் கோபப்பட்டனர். ‘‘நான் கோபப்பட்டால் எதிரிகளின் எண்ணம் நிறைவேறி விடும். இப்போதுதான் பாருங்கள் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதல்லவா’’ என சிரித்தார் சாக்ரடீஸ். பார்த்தீர்களா... இப்படி உங்களுக்கு ஏற்படும் அவமானங்களை நினைத்து கோபப்படாதீர்கள். அதை நிதானமாக கையாளுங்கள். தோல்வி அடையும்போது வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே தோன்றும். ஆனால் அவமானம் அடையும்போது உங்களின் தனித்தன்மையை காட்ட முயல்வீர்கள். அப்போது நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியவரும்.