விநாயகருக்கு மோதகம் தான் விருப்பமான நைவேத்யம். ஆனால் கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் உள்ள ஜூரஹர விநாயகருக்கு சாதம், ரசம், பருப்புத் துவையல் ஆகியவற்றை நிவேதனம் செய்கின்றனர். இதனால் இவருக்கு ‘ஜூரஹர விநாயகர்’ என்று பெயர். இருதய நோய், ஆஸ்துமா, அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் கொண்டவர்கள் இவற்றை நிவேதனம் செய்து நிவாரணம் வேண்டுகின்றனர்.