கும்பகோணம் – வலங்கைமான் சாலையில் 9 கி.மீ., தொலைவில் சாக்கோட்டை அமிர்தகலச நாதர் கோயில் உள்ளது. இங்குள்ள அமிர்தவல்லி அம்பாள் ஒரு காலை உயர்த்தி, இன்னொரு காலை தரையில் ஊன்றி, ஒரு கையை தலையில் வைத்து தவம் செய்யும் கோலத்தில் அருள்புரிகிறாள். இவளுக்கு ‘தபசு அம்மன்’ என்றும் பெயருண்டு.