கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், 39வது தேர் திரு விழா நடந்தது. கடந்த, 30ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவக்கியது. நேற்று முன்தினம் இரவு தேர்த் திருவிழா நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில், தூய பாத்திமா அன்னை நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அன்னை மீது உப்பு, மிளகு தூவி வழிப்பட்டனர்.