திருச்சுழி: திருச்சுழி அருகே செங்குளத்தில், புதியதாக கட்டப்பட்ட ராஜகாளி அம்மன் கோவில் திருப்பணி முடிவடைந்த நிலையில், நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஊர்மக்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, தீபாராதனை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, வேத மந்திரங்கள் முழங்க, காளியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.