திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2022 06:02
திருச்சுழி: திருச்சுழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். கொடிமரத்தில் கொடிக்கு வேள்வி, பூஜைகள் நடந்தன. பின்னர், சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி, ரிஷப, மயில் உள்ளிட்ட வாகனங்களில் வந்து அருள்பாலிப்பார். வருகிற 18-ஆம் தேதி பொங்கல் திருவிழா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்வர்.