பதிவு செய்த நாள்
11
பிப்
2022
06:02
அவிநாசி: திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில், விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொங்கேழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில் விளங்குகிறது. தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடி, கோவிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது. பிறகு, உற்சவ மூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. இன்று மாலை, சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 13ல், பூதவாகன, சிம்ம வாகனக் காட்சிகள், 14ல், புஷ்ப வாகன காட்சி, 15ல், பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி, 16ல், யானை, அன்னவாகன காட்சி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. வரும், 17ல், விநாயகர், சண்முகநாதர், திருமுருகநாதர் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல், தேரோட்டம் நடைபெறுகிறது. 19ல், தெப்பத்தேர், 20ல், ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 21ல், பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி, 22ல், மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனகாட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.