இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தை கடைசி வெள்ளி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2022 05:02
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் தை மாத கடைசி வெள்ளி ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை பெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம் நேற்று கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக வரும் கார் வேன் லாரி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர் அதிகாலையில் அம்மனுக்கு பொங்கல் முடி காணிக்கை செலுத்தியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே கோவில் நிர்வாகத்தின் சார்பில் கைகளை கழுவுவது வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது முக கவசம் அணிந்து அவர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் பக்தர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டது தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது இருக்கன்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.