பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
கோவில்பாளையம்: குரும்பபாளையம், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குரும்பபாளையம், குமரன் நகரில், புதிதாக கற்பக விநாயகருக்கு, கருவறை, விமானம், திருச்சுற்று மூர்த்திகள் அமைத்து திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. இரவு விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை அதிகாலை 5:00 மணிக்கு 108 மூலிகை பொருட்களால் வேள்வி பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு, விமானத்திற்கும், இதையடுத்து, மூல மூர்த்திகளுக்கும், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர் வேள்வி வழிபாட்டினை செய்தனர்.