Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோயில் ... வைத்திக்குப்பத்தில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சி கோவிலில் மாசிமக தேர் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
03:02

வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டத்தை அமைச்சர் தேனீ ஜெயகுமார் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 8ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 11ம் தேதி பாரிவேட்டை, 15ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.தாசில்தார் கார்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், முன்னாள் சேர்மன் பாலமுருகன் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மாட வீதிகள் வழியாக சென்று பகல் 12:15 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.இன்று(17ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதில் உறுவையாறு, மங்கலம், ஆரியூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊர்களின் கோவில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar