அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் நாகபுற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.நோணாங்குப்பத்தில் உள்ள நாகபுற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மாசி மகத்தையொட்டி, இக் கோவிலில் 4ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடந்தது.அதையொட்டி, அம்மனுக்கு நேற்று அதிகாலை சந்தனக்காப்பு அலங் காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து ரணகளிப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.