விநாயகர் கோவில் தேர்த்திருவிழா பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2022 07:02
கூடலூர்: கூடலூர் விநாயகர் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பாக நடந்தது.
கூடலூர் விநாயகர் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. காலை கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 18ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை கணபதி ஹோமம் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
மாலை 650 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் தேர் திருவிழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய நகர் வழியாக சென்று, கோவிலை வந்தடைந்தது. தொடர்வது விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.