பதிவு செய்த நாள்
23
பிப்
2022
04:02
மானாமதுரை: மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் உள்ள ஜெயம் பெருமாள்,ஜெகதீஸ்வரர் சமேத திரிபுர சுந்தரி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு தவக்கோலத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் பெருமாள்,ஜெகதீஸ்வரர்,18 சித்தர்கள், சுப்பிரமணியர் கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.மேலும் இங்குள்ள கோயில் குளத்தில் ராகு,கேது பகவானுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து தற்போது வருகிற மார்ச் 1ம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக இக்கோயில் வளாகத்தில் தவக்கோலத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவராத்திரி விழாவிற்காக காப்புக்கட்டுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.தென்மாவட்டங்களில் முதன்முறையாக தவக்கோலத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை யடுத்து மானாமதுரை,மதுரை,சிவகங்கை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும், பூஜாரியுமான பாலசுப்ரமணியன் செய்து வருகிறார்.