பதிவு செய்த நாள்
23
பிப்
2022
01:02
மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா மார்., 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நாட்களில் சுவாமிக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வரும் மார்., 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
மார்., 8ம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் உலா–நாடகம் நடைபெறுகிறது.
மார்., 9ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஐயா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து மார்., 9 முதல் 17 ம் தேதி வரை உற்ஸவர் குதிரை,காமதேனு,காளை போன்ற வாகனங்களிலும்,பூப்பல்லக்கு வீதிவுலா நடைபெறுகிறது.
மார்., 18 ம் தேதி பால் குடம், காவடி, தேரோட்டம் நடைபெறுகிறது. மார்., 18 ம் தேதி தீர்த்தவாரி, மார்., 20ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.