திருமண அழைப்பிதழில் ‘பாணிகிரகணம் செய்து கொடுப்பதாய் நிச்சயித்து’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். திருமண பந்தத்திற்கு ‘பாணிகிரகணம்’ என்று பெயர். ‘பாணி’ என்றால் ‘கை’ ‘கிரகணம்’ என்றால் ‘பிடித்தல்’. ‘கைப்பிடித்தல்’ என்பது இதன் பொருள். மணமகன் வலக்கையை கவிழ்த்தது போல வைத்து, மணமகளின் வலக்கையைப் பிடித்தபடி, பாணிகிரகண மந்திரம் சொல்வர். தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக இந்த மந்திரம் சொல்லப்படுகிறது.