ஆயிரம் பேர் கூடிநின்று நடந்தாலும், திருமணம் அக்னிசாட்சியாக நடந்ததாகவே குறிப்பிடுவர். மணவறையில் தாலிகட்டியதும் தம்பதியர் அக்னியை மூன்று முறை வலம் வருவர். அப்போது மணமகன், “அக்னிதேவனே! உத்தமமான இந்தப் பெண்ணை உன்னருளால் மனைவியாகப் பெற்ற பாக்கியசாலி நான். இவளுடைய கைகளைப் பற்றியே உன்னை வலம் வருகிறேன். உன்னருளால் நாங்கள் என்றும் இணைந்திருப்போம். நல்ல குழந்தைகள், செல்வம், புகழ் அனைத்தும் பெற்று பெருமையோடு வாழ்வோம். நோய், வறுமை, பாவம் எதுவும் எங்களை தாக்காமல் தர்மவழியில் நடப்போம். என்றென்றும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக. நீயே சாட்சி!” இதனடிப்படையில் ‘அக்னி சாட்சியா நடந்த கல்யாணம்’ என்று சொல்வது வழக்கம்.