சீதையைப் பிரிந்த ராமர் இலங்கையில் ராவணனை வதம் செய்தார். ஆனால் அதே ராமர் சீதையோடு சேர்ந்திருந்த காலத்தில் காகாசுரனைக் கொல்லாமல் உயிர்ப்பிச்சை அளித்தார். பார்வதியைப் பிரிந்தபோது சிவன், மன்மதனை வதம் செய்தார். ஆனால் கைலாயத்தில் உமையவளோடு இருந்த சமயத்தில் ராவணனை மன்னித்து அனுப்பினார். தெய்வீக சக்தியாகிய கடவுள் கூட மனைவியோடு சேர்ந்திருந்த காலத்தில் யாரையும் கொல்ல விரும்புவதில்லை. தனிமை என்பது காட்டாறு போல அழிவுக்கு அடிகோலும். ஆனால் திருமணம் என்பது நீரோடை போல ஆக்கத்திற்கு துணைநிற்கும். பெண்ணே குடும்ப வாழ்விற்கு பெருமை சேர்க்கிறாள்.