பண்ருட்டி ; பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில் நேற்று மூலவர் லிங்க திருமேனியில் சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் 13 ம் தேதி மூலவர் லிங்கம் மேல் சூரிய ஒளிபடும் நிகழ்வு நடக்கும். நேற்று காலை 6.40 மணிக்கு மூலவர் காசிவிஸ்வநாதர் மேல் சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் காசி விஸ்வநாதர் சுவாமியை தரிசனம் செய்தனர்.