தஞ்சை : பட்டுக்கோட்டை வட்டம் செட்டியக்காடு கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிவசக்தி ஆலயம் உள்ளது. இவ்வாலயம் ஆக்கப்பட்டது நாடிமுத்து சாமிகளா நிர்மாணிக்கப்பட்டது. ஒரு இரவு வேலையை முடித்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு பெண் ஒருவர் அவரை தட்டி எழுப்பி தனியாக அழைத்துச் சென்று அவ்வூரில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என கூறி மறைந்தார் வந்தவர் யார் என்ன ஆலயம் எழுப்புவது என ஒன்றும் புரியாமல் குழம்பிப் போயிருந்தார் நடந்த சாமிகள் அப்போது தனியார் இதுமாதிரி கூறி சென்றார் என்பதை தெரிந்து கொள்வதற்காக குழப்பத்தில் இருந்த நாடிமுத்து சாமிகளுக்கு மீண்டும் நாகத்தின் வடிவில் காட்சி தந்து நூத்தி எட்டு நாள் கடும் விரதமிருந்து தவமிருந்து, அக்கினி இறங்கி பிரவேசித்தார் யார் யார் என்று நீ தெரிந்து கொள்ளலாம் என்று கூறி மறைந்தது. அந்த நாகம் அவ்வாறு நாடிமுத்து சாமிகள் நூத்தி எட்டு நாள் கடும் விரதமிருந்து தவமிருந்து அக்னியில் இறங்கவே அப்போது அர்த்தநாரீஸ்வரராக காட்சி கிடைக்கவே அவ்வாறு அவ்விடத்தில் ஆலயம் எழுப்புவதற்கு முயற்சி செய்து முதலில் சிவலிங்கம் மரத்தினால் ஆனது ஆனதும் சூலமே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி வந்தார். பின்பு அக்னி இறங்கியபோது அம்மையப்பனாக காட்சி தந்த அதே போன்ற உருவத்தை பக்தர்களின் உதவியோடு சிலையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. அங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருளி அம்மையப்பனாக அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்கின்றார் இங்கு சிறப்பு என்னவென்றால் கணவன் மனைவி இருவரும் ஒருவரே என்ற தத்துவத்தை விளக்கும் விதமாகவும் இங்கு அமையப் பெற்றுள்ளது மேலும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் திருமணம் ஆகாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் தடையின்றி திருமணம் நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் வேண்டிக்கொண்டார் குழந்தை பெறுகின்றனர். இவ்வாலயம் ஆக்கப்பட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து 82 நிர்மாணிக்கப்பட்டது 87 சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இதுவரை மூன்று கும்பாபிஷேகங்கள் நடைபெற்று உள்ளது இக்கோவிலை நிர்மாணித்த நாடிமுத்து சுவாமிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முக்தி அடைந்தார். அவரையும் இவ்வாலயத்தின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது இவ்வாலயத்தில் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது மேலும் இவ்வாலயத்தில் விநாயகர் முருகர் காத்தாயி அம்மன் துர்க்கை அம்மன் மாரியம்மன் வடிவுடையம்மன் ஆஞ்சநேயர் ஐந்து தலை நாகம் உள்ளிட்டவை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்திற்கு பக்தர்கள் சென்று வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெற்று வளமுடன் வாழலாம். இவ்வாலயத்திற்கு செல்வதற்கு பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது ரோட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் கிராமத்திற்குள் செல்ல வேண்டும். தொடர்புக்கு: 9976252733