காரைக்கால்: காரைக்காலில் பார்வதீஸ்வர் கோவிலில் அம்மன் சிலை சேதம் அடைந்த நபர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் கோவில்பத்து பிரசித்திப்பெற்ற ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடையது.இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி அம்பாள் சிலையில் கை பகுதி சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் தகவல் அறிந்த கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் இந்து முன்னாணி சார்பில் ஆர்.எஸ்.எஸ்.,நாகை மாவட்ட இணை செயலாளர் சிவாநந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் கை சிலை உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் அறங்காவலர் குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டார். மேலும் கோவில் சிலை உடைப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் கோவில் குருக்கள் மீது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையம் அருகில் திடீர் சாலை மறியல் ஈடுப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நகர இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது பார்வதீஸ்வர் கோவிலில் அம்மன் கைசிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.