பதிவு செய்த நாள்
03
மார்
2022
11:03
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் பஜனை நடந்தது.
பிரசித்தி பெற்ற அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 46வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முதல்கால பூஜை நடந்தது. இதையடுத்து இரவு 11:00 மணி, நள்ளிரவு 1:00 மணி, நேற்று அதிகாலை 3:30 மணி, என நான்கு கால பூஜைகள் நடந்தன. இரவு அம்பாள் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 9:30 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் பஜனை துவங்கி, நேற்று காலை 5:30 மணி வரை நடந்தது. பஜனை பாடல்களுக்கு பக்தர்கள் நடனமாடினர். அன்னூர், அவிநாசி, கோவில் பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, கோவை உள்ளிட்ட பகுதியில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் இரவு முழுவதும் மன்னீஸ்வரரை தரிசித்தனர். கோவில் வளாகத்தை பலர் 108 முறை வலம் வந்து வணங்கினர்.