* தாய், தந்தையின் அன்புக்கு இணையில்லை. கடவுளின் அன்பும் அது போலவே. * கடவுள் உன்னிடம் பொறுமை, நம்பிக்கை என்னும் காணிக்கைகளையே எதிர்பார்க்கிறார். * சம்பாதிக்கும் பணத்தில் இரண்டு சதவீதமாவது நன்கொடையாக கொடு. * எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு. * பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம். * நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை நீ அனுபவித்தே ஆக வேண்டும். * இன்ப, துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை. * மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே * கடவுள் மீது கவனத்தை செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவாய். * போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதே. * பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவு. நெருக்கடி நேரத்திலும் விவேகமாக இரு. * பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே. * உணவிலும், உடையிலும் எளிமையாக இருக்கப் பழகு. * பணியில் கவனம் செலுத்து. ஆனால் ஆழ்மனம் கடவுளை சிந்திக்கட்டும். * யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச் செல்.